மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ்

நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்களை துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை இயக்கப்பட உள்ள குளிர் வசதி கொண்ட நகரப்பேருந்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பேருந்தில் பயணம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகம் முழுவதும், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடைபெற்றதை போல, பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஜீரோ கவுன்சிலிங்' நடத்த வாய்ப்பில்லை என்றும் ஆசிரியர்களுக்கு நடத்தவிருக்கும் கவுன்சிலிங் குறித்த கொள்கைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

பள்ளி வரும் மாணவர்களை ஆசிரியர்கள் துன்புறுத்த கூடாது. அவர்களை பள்ளிக்கு வரவழைப்பது தான் உங்களது பணி என்றும்  ருத்ராட்சம் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என மாணவர்களை சில பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே ஆசிரியர்களின் கடமை. மாறாக அவர்களிடம் எந்த ஒரு பாகுபாடும் பார்ப்பதோ, அவர்களை துன்புறுத்தவோ கூடாது, அப்படி துன்புறுத்தும் ஆசிரியர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.