" 234 தொகுதிகளிலும்.....” வேலைவாய்ப்பு முகாமில் பேசிய முதலமைச்சர்!!!

" 234 தொகுதிகளிலும்.....” வேலைவாய்ப்பு முகாமில் பேசிய முதலமைச்சர்!!!

சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை கண்டு நான் மனவேதனை அடைந்தேன் இனி எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு முகாம்:

சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் நடைபெற்றது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் துறை நிறுவனங்களால் 40,000 க்கும் காலிப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஆனது நடைபெற்றது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு என பிரத்தியேக வேலைவாய்ப்பு அரங்குகளும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் அமைக்கப்பட்டுள்ளது. 

லட்சமாவது...:

2021 ஜூன் மாதம் முதல் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் ஏற்கனவே பலருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரு லட்சமாவது பணி நியமன ஆணையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், 

பெரிய மகிழ்ச்சி:

இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கிக் கொண்டிருக்கும் அப்துல் கலாமின் பிறந்தநாளில் இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று ஒரு லட்சமாவது வேலை வாய்ப்பு ஆணையை வழங்குவது மகிழ்ச்சி. இதைவிட அரசாங்கம் நடத்த கூடிய ஒருவருக்கு வேற என்ன மகிழ்ச்சி கிடைத்து விட போகிறது என்ற அவர், கொரோனா காலம் வேலை வாய்ப்புக்கு சவாலான காலமாக இருந்தது அப்போது  ஆட்சிக்கு வந்தது திமுக.

கொரோனா:

மருத்துவமனையில் இடமில்லை, ஆக்சிஜன் இல்லை என்ற நிலை அந்த நேரத்தில் கொரோனா தடுப்பு பணியில் எங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டோம். ஆட்சியில் இருந்த நாங்கள் அனைவரும் மருத்துவராக மாறியதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது என்றார். மேலும், கொரோனாவை காரணம் காட்டி வேலை வாய்ப்பை வழங்காமல் இருக்கவில்லை.  ஒன்றரை ஆண்டில் 1 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு முகாம் மூலம் வேலை கிடைத்துள்ளது என தெரிவித்தார். 

234 தொகுதிகளிலும்....:

தொடர்ந்து பேசிய அவர், வேலை வாய்ப்பு முகாமிற்கு கையில் பட்டம், கனவுகளோடு வந்திருக்கும் அனைவரையும் அன்போடு வரவேற்க கடமைப்பட்டுள்ளேன் எனவும், அமைச்சருக்கு சி.வி. கணேசனுக்கு ஒரு வேண்டுகோள் கொளத்தூர் தொகுதியிலும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை நடத்த வேண்டும், அதேபோல தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த வேண்டும் என்றார். 

உண்மையான சமூக நீதி:

திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும், வேலை வாய்ப்பு முகாம் எனக்கு திருப்திகரமாக இருக்கிறது. தனியார் வேலைவாப்பு முகாம் மூலம் மாற்றுத்திறனாளி, திருநங்கை களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளது தான் உண்மையான சமூக நீதி என்ற அவர், 
என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியும் ஒன்று என்றார். மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் ஒரு பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவது இலக்காக வைத்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். 

மாற்றுதிறனாளிகளுக்கு:

தமிழகத்தில் மொத்தமாக 782 முகாம்கள் நடைபெற்று இருக்கிறது, அதில், 15,691 நிறுவனங்கள் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு இருந்தனர் இது வரை 99,999 பேர் பல்வேறு வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர் என்ற அவர், மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் மூலமாக வேலை கிடைத்திருக்கிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறேன் என்றார். மேலும், ஒரு இளைஞருக்கு வேலை கிடைப்பது மூலமாக அவரது குடும்பம் முன்னேறுகிறது. அதன் மூலம் அவருடைய தலைமுறையும் முன்னேற்ற பாதைக்கு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு தகுதி, அறிவு,  வைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

சென்னை மாணவி வழக்கு:

சென்னையில் சத்யா என்ற மாணவிக்கு நடந்த துயரத்தை கண்டு நான் மனவேதனை அடைந்தேன். இனி எந்த ஒரு பெண்ணுக்கும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க வேண்டும். அதற்கு தங்கள் பிள்ளைகள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அறிவாற்றலும் தனித்திறமையும் சமூக நோக்கமும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக  அவர்களை பெற்றோர் வளர்க்க வேண்டும்.

பாட புத்தகம் மட்டும் அல்லாமல் சமூக கல்வி மாணவர்களுக்கு அவசியமானது, நல்லொழுக்கமும் பண்பும் கொண்டவர்களாக மாணவர்கள் வாழ வேண்டும் என்றார். மாணவர்கள் எந்த ஒரு திசையும் மாறியும் மாணவர்கள் செல்வது பெற்றோர்களின் கடமை இருக்கிறது.  பெண்களின் பாதுகாவலன்களாக இருக்க வேண்டும் என்ற அவர், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நன்மை அளிக்கும் அரசாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது.

திறமை உள்ள  இளைஞர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்களின் திறமையை வளர்த்துக் கொண்டு உங்களுக்கு ஆர்வமான வேலைக்கு செல்ல வேண்டும். மேலும், தேங்கிருந்தால் குட்டையாகி விடுவோம் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு தான் கடலுக்கு சென்றடையும் என தெரிவித்தார்.