தமிழக சட்டசபையில் 3-வது நாளாக தொடர்கிறது பட்ஜெட் மீதான விவாதம்!!

தமிழக சட்டசபையில், மூன்றாவது நாளாக பட்ஜெட் மீதான விவாதம் இன்றும் தொடர்கிறது.

தமிழக சட்டசபையில் 3-வது நாளாக தொடர்கிறது பட்ஜெட் மீதான விவாதம்!!

கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 18 ஆம் தேதி பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதைத் தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதனிடையே தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் பற்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்றைய முன்தினம் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. நேற்றைய விவாதத்தின்போது பட்ஜெட் குறித்த எதிர்கட்சிகளின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

இருந்த போதிலும் எதிர்கட்சிகள் தமிழக பட்ஜெட் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  இந்த நிலையில், இன்று மூன்றாவது நாட்களாக பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது.