ஒரு கிராமத்தையே காப்பாற்றிய திமுக எம்பி கதிர் ஆனந்த்... தண்ணீரில் மிதந்த மொத்த ஊரையும் ஒத்த ஆளாய் பாதுகாத்த சம்பவம்!!

ஒரு கிராமத்தையே காப்பாற்றிய திமுக எம்பி கதிர் ஆனந்த்... தண்ணீரில் மிதந்த மொத்த ஊரையும் ஒத்த ஆளாய் பாதுகாத்த சம்பவம்!!

கடந்த சில நாட்களாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை  காரணமாக தமிழகத்தில் குறிப்பாக வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட பகுதிகள் பெரும் சேதம் அடைந்தன. அதே போன்று காட்பாடியில் பல்வேறு இடங்களில் பாலாற்று நீர் புகுந்ததால் மக்கள் பெரும்

அவதிக்குள்ளாகினர். இப்படியான நிலையில் வேலூர் நாடாளுமன்ற எம்பி கதிர் ஆனந்த், கடந்த ஒரு வார காலமாக தொகுதி மக்களை சந்திப்பதில் முழு கவனம் செலுத்து வருகிறார். 
 


பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்து வருகிறார். சேதமடைந்த வீட்டு பகுதிகளை பார்வையிட்டு விரைந்து அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பது முதல், மின்சாரம் பழுது, உணவு பொருட்கள் கிடைக்கப்பெறாமை  உள்ளிட்டவற்றிற்காக அடுத்தப்படுத்து விரைந்து செயல்பட்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறாராம் கதிர் ஆனந்த்  

மேலும் 24 மணி நேரத்தில் யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படும் பொருட்டு நேரடியாக தெரிவிக்க தொலைபேசி எண்ணையும் கொடுத்து தொடர்ந்து தன் தொகுதி மக்களின்  தேவைகளை பூர்த்தி செய்து வைக்கிறார்.

குறிப்பாக, அதிகம் பாதிக்கப்பட்ட குடியாத்தம் கரையோர பல பகுதிகள் கே.வி.குப்பம் தொகுதியில் வருகிறது. இந்த தொகுதிக்குட்பட்ட சில கிராமங்கள் கடந்த ஒரு வார காலமாக  தனி தீவாய் மாறி உள்ளது. அந்த கிராமத்தில் இருந்து வெளியேற கூட முடியாமல், வெளியிலிருந்து அக்ககிராமங்களுக்குள் செல்லவும்  முடியாமல் தவித்து வந்தனர். மின்சாரம் கூட இல்லாமல் அவதிக்குட்ப்பட்ட அம்மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருப்பது கவுண்டன்ய நதிக்கு இடையே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்பதே. இந்த முறையாவது தரைப்பாலம் கட்டுவார்களா என எதிர்பார்க்கும் இந்த தருணத்தில், கே.வி குப்பம் சட்ட மன்ற உறுப்பினரான ஜெகன் மூர்த்தி, குடியாத்தம்- காட்பாடி வழி சாலை அருகே தன் ஆதரவாளருடன் தரையில் அமர்ந்து, எந்த அதிகாரியும் வர மாட்டேன்றாங்கன்னு போராட்டம் நடத்தினார். ஊர் மக்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பார் என மக்கள் எதிர்பார்க்கும் தருணத்தில் ஒரு எம்எல்ஏ -வே, அதிகாரிகள் யாரும் வரவில்லைனு போராடுவதை பார்த்த மக்கள்.. சரியா போச்சு போ... இது என்னடி புது கதையா இருக்குனு.... உள்ளுக்குள்ளே பேசிக்கிறார்களாம்.

இதை எல்லாம் ஒப்பிட்டு பார்த்து, சட்டுபுட்டுன்னு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வரும் கதிர் ஆனந்த் பக்கம் திரும்பியுள்ளதாம் மக்களின் பார்வை. மேலும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் மிகவும் மோசமடைந்து உள்ளதை  சுட்டிக்காட்டி, விபத்து ஏற்படாமல் தவிர்க்க விரைந்து சீரமைக்கவும், புதிய பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து இருந்தனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் இந்த பாலத்திற்கு தீர்வு ஏதும் காணப்படாத நிலையில் தற்போது காட்பாடி மக்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கு விடிவுகாலம் பிறந்துள்ளது. மிக விரைவில் போக்குவரத்தை மாற்றி அமைத்து விட்டு புதிய மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக எம்.பி கதிர் அனந்த் தெரிவித்துள்ளார். மிக பெரிய ரயில் நிலையமான காட்பாடியில், புதிய பாலம் அமைக்கும் பொருட்டு,மக்கள் பெரிதும் பயனடைவர்.

மக்களின் ஒவ்வொரு கோரிக்கைகளையும் நிறைவேற்றி வரும் எம்.பி கதிர் ஆன்ந்தின் செயலை பார்த்து வியப்படைந்த மக்களின் பார்வை தற்பொது அவர் பக்கம் திரும்பியுள்ளதாக சொல்லபடும்வேளையில்,  தண்ணீரில் மிதந்த மொத்த ஊரையும் ஒத்த ஆளாய் நின்று, ஒரு கிராமத்தையே காப்பாற்றிய திமுக எம்பி கதிர் ஆனந்த் மூலமாக நல்ல விடிவுகாலம் பிறந்துள்ளதாக பொதுமக்கள் பேசி வருகின்றனர்.