ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு.. அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு.. அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாகவும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் அருவிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அருவிக்கு வரும் நீர் வரத்து 7 ஆயிரம் கன அடியாக ஆக இருந்த நிலையில், இன்று காலை 16 ஆயிரம் கன அடியாக இருந்து, பின்னர் 22 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அருவியில் குளிக்கவும்,  பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை விதித்துள்ளார். இதனால் கோடை விடுமுறையை கொண்டாட ஓகேனக்கலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.