குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் ’இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம் தொடக்கம்.

குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் ’இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டம் தொடக்கம்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்பினி தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் 'இந்திரதனுஷ்’ தடுப்பூசி திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அப்போது  மேடையில் உரையாற்றியபோது:- 

” இந்த தடுப்பூசி திட்டமானது இந்திய முழுவதும் மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான சிறப்பு முகாம்கள் இன்றிலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது,முதல் கட்டமாக ஆகஸ்ட் 7 முதல் 12 ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக அக்டோபர் 9 தொடங்கி 15ம் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக செப் 11 தொடங்கி 16 வரையிலும்  இந்த தடுப்பூசி திட்டமானது செயல்படும். நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் 11 வகை சுப்பூசிகள் 15 வியாதிகளை தடுப்பதற்கு போடப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து,  ” தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 9.15 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவது மூலம்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கடந்த வருடம் 298123 கர்ப்பிணி தாய்மார்களும் 69483 குழந்தைகளும் பயன்பெற்றுள்ளனர்.  

69900 குழந்தைகளும், 13900 தாய்மார்களும் தடுப்பூசி செலுத்தமால் உள்ளார்கள். இவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்”,  என்றார்.

மேலும்,  ” இது போன்ற நிகழ்ச்சிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடத்தப்பட்டு அதற்கான பயிற்சிகளை வழங்கப்பட்டு இந்த திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்களே இல்லை என்ற நிலை வர வேண்டும்.. என்பதற்காகவே இந்த திட்டம் முழுக்க முழுக்க செயல்பட்டு வருகிறது.

இரண்டு மூன்று நாட்களுக்குள் இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்து, அதன் செய்தி குறிப்பை மருத்துவர்கள் வெளியிடுவார்கள் என நம்புகிறேன்”, என தெரிவித்தார்.

இதையும் படிக்க   \  ” திமுகவின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது “ - இபிஎஸ் சாடல்.