குப்பை கிடங்கில் இருந்து தீ புகை மூச்சுத்திணறல் - சாலைமறியல்

பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து தீ பற்றி புகை அதிகமாக வெளியேறுவதால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

குப்பை கிடங்கில் இருந்து தீ  புகை மூச்சுத்திணறல் - சாலைமறியல்

திண்டுக்கல் பழனி சாலை முருக பவனம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால்க்கு வரத்து படும் பாதிப்பு.

திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையானது திண்டுக்கல்- பழனி சாலையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் பல நேரங்களில் சமூகவிரோதிகளால் தீ வைக்கப்படுவதால் அந்தோணி நகர், கருணாநிதி நகர் , இந்திரா நகர், முத்துராஜ் நகர் போன்ற பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருகின்றனர். பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் கூறபடுகிறது.

மேலும் படிக்க | ஸ்பீக்கர் பாக்ஸ் சரி செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு

இப்போது ஏற்பட்ட புகை மூட்டத்தால் குழந்தைகள், வயதானவர்கள் என பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறி திண்டுக்கல் பழனி சாலை முருககவனம் பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் படிக்க | மூன்று நாளில் கரை திரும்ப வேண்டியது.. 75 நாட்களாகியும் தகவல் இல்லை..

போக்குவரத்து பாதிப்பில் சிக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து காவலர்கள் இன்றி கடும் அவதிக்கு உள்ளாகி பொதுமக்களே போக்குவரத்தை சரி செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் மாற்றுவது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.தொடர்ந்து மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து ஏற்படும் புகை மூட்டத்தால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுவதால் குப்பை கிடங்கை விரைந்து மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.