10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய உத்தரவு...

10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய உத்தரவு...
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
 
பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை விவரம், 10 & 12-ஆம் வகுப்பு மாணவர்களின் விவரம் போன்றவற்ற EMIS தளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு உரிய முறையில் விண்ணப்ப பதிவை மேற்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். 
 
மேலும் பள்ளி வளாகத்தை முறையாக பராமரித்து, மரக்கன்றுகள் நட்டும், புது வண்ணம் பூசியும் சீரமைக்க வேண்டும். மாணவர்கள், பெற்றோர்களின் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று போன்றவற்றை திரட்டி அதன் விவரங்களையும் பராமரிக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சி வாயிலாக நடத்தப்படும் பாடங்களின் அடிப்படையில் தேர்வு நடத்த வேண்டும்.
 
கடந்த ஆண்டி படித்த மாணவர்களின் விவரம், நடப்பு ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரத்தை ஒப்பிட்டு விடுபட்ட மாணவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.