இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெறுவதாக  அறிவிப்பு

'சம வேளைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 26-ஆம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதிக்கு முன்பு உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இரவு - பகலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் மயக்கம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆராயும் வகையில், நிதித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் அடங்கிய குழு அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  

இந்த நிலையில்  முதலமைச்சரின் கோரிகை்கையை ஏற்ற, தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட்  அறிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரிடமும் பேசி இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்

முன்னதாக, தொடக்கக் கல்வித்துறை இயக்குனர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.