உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் எண்ணம்... கார்த்திக் சிதம்பரம் பேட்டி...

கீழடி அகழாய்வு மூலம் உண்மைகள் வெளிவந்து விடக்கூடாது என்பதுதான் மத்திய பாஜக அரசின் எண்ணம் என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.

உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் எண்ணம்... கார்த்திக் சிதம்பரம் பேட்டி...

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டார். பிறகு 
செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் மேலும் கூறியதாவது : 

இந்திய வரலாற்றை இந்துத்துவ அடிப்படையில் பார்ப்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர் அதனால்தான்  கீழடியில் அகழாய்வு மூலம் உண்மைகள் வெளி வந்துவிடக் கூடாது என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் எண்ணம். கச்சா எண்ணெய் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நூறு டாலராக இருந்தது. அப்போது இருந்த பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக தான் இருந்தது. ஆனால் இப்போது 74 டாலராக தான் இருக்கிறது இப்போது மத்திய அரசின் வரிவிதிப்பின் மூலமாக பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் மத்திய அரசுக்குத்தான் செல்கிறது. பணமதிப்பு நீக்கத்தின் மூலமாக தான் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பது உண்மை. இந்திய பொருளாதாரத்தில் தமிழகம் மூன்றாவது மாநிலமாக உள்ளது. தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு பல நூறு கோடி ரூபாயை மத்திய அரசு தமிழக அரசுக்கு இதுவரை வழங்கவில்லை மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழக நிதியமைச்சர் போன்றவர்களை சேர்க்கவில்லை இந்திய ஜனத்தொகையில் 6% தான் தமிழ்நாட்டுக்கு.

ஆனால் இந்தியாவில் 12 % மருத்துவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வருகிறார்கள். தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை, மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதத்தில் சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் அமைந்துள்ளது. ஆனால் சட்டப்பூர்வமாக எடுக்கும் நடவடிக்கைகள் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும். ஆளுநர் ஆட்டு தாடி போன்றவர், அவரால் எந்த பயனும் இல்லை என்று அறிஞர் அண்ணா கூறுவார்.

புதிய ஆளுநர் நாகாலாந்து மாநிலத்தில் இருந்த போது அங்கு  பிரிவினைவாதிகளுடன்  நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அவரை இங்கு மாற்றி இருக்கிறார்களே ஒழிய வேறு ஒன்றும் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை இவ்வாறு கூறினார்.