நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு... பயனாளிகள் பட்டியலை இறுதி செய்ய அறிவுரை...

நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி தமிழக கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு... பயனாளிகள் பட்டியலை இறுதி செய்ய அறிவுரை...

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக கூட்டுத்துறை அமைச்சகம், ஒரு குடும்பத்துக்கு ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதனையடுத்து பொது நகை கடன்களை ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டு, சேலம் மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் சரிபார்க்கும் பணி முடிவு பெற்று, தகவல் பதிவேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 

மண்டல இணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகை கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடன்கள் விவர பட்டியல்கள் அனைத்தும் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.