"பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள்  குரல் எழுப்பினாலே அவையை கலைத்து விடுகின்றனர்" கனிமொழி சோமு வருத்தம்! 

"பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள்  குரல் எழுப்பினாலே அவையை கலைத்து விடுகின்றனர்" கனிமொழி சோமு வருத்தம்! 

பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள்  குரல் எழுப்பினாலே அவையை கலைத்து விடுகின்றனர் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு தெரிவித்துள்ளார்.

தேசிய இளையோர் பாதுகாப்பு கவுன்சில் சார்பாக சென்னை பெசண்ட் நகர் பீச்சில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு வாக்கத்தான் நடத்தப்பட்டது. இதில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு, தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கல்லூரி மணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது, குழந்தைகளுக்கான உதவி எண்ணை குறித்து குழந்தைகளிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.  

நாடாளுமன்ற கூட்டத்தில் பேசப்படும் விவகாரங்கள் தொடர்பாக் கட்சி தலைவர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கூட்டம் நடத்தப்படும் என்றும், செங்கோல், கர்நாடக தேர்தல், சிபிஐ விசாரணை,  ராகுல் காந்தி தீர்ப்பு, பொதுசிவில் சட்டம் போன்றவை குறித்தும் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசப்படும் என்றார். பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பினாலே அவையை கலைத்து விடுவதாக கூறிய அவர் இதனால் போராட்டம் நடத்த வேண்டி உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், வரும் கூட்டத்தொடரிலும் கூட அவை ஒத்தி வைப்பு நடக்கவே வாய்ப்பு உள்ளது என்றார்.

இதையும் படிக்க:ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு 2 வீரர்கள்!