கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும்...!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும்...!

கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வருகிற ஜூன் மாதம் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீரென ஆய்வு  செய்தார். 

இதையும் படிக்க : ”குற்றவாளிகளை காப்பாற்ற மத்திய அரசு முயற்சி” மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு பிரியங்கா காந்தி ஆதரவு!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர், சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59. 86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்ட  பணிகள் அனைத்தும் தற்போது முடிவடைந்து விட்டதால், வருகிற ஜூன் மாதம் புதிய பேருந்து நிலையத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.