ஜெயலலிதா, எடப்பாடி படமே இருக்கட்டும்..! வீண் செலவு வேண்டாம்..! மாஸ் காட்டிய ஸ்டாலின்..!

ரூ.13 கோடி வைத்து வேறு திட்டங்கள் நிறைவேற்றலாம்..!

ஜெயலலிதா, எடப்பாடி படமே இருக்கட்டும்..! வீண் செலவு வேண்டாம்..! மாஸ் காட்டிய ஸ்டாலின்..!

பொதுவாக அரசியலில் ஒருக் கட்சியினர் ஆட்சியைப் பிடித்தால், முதலில் அவர்கள் செய்வது முந்தைய ஆட்சியில் இருந்தவர்களின் திட்டங்களில் தங்களது தலைவர்கள் பெயர்களையும், படங்களையும் பதிப்பது தான் இருக்கும். ஆனால் இந்த செயலை மாற்றி மாஸ் காண்பித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 65 லட்சம் விலையில்லா புத்தகப் பைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், முன்னாள் அதிமுக முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதனை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்ட போது, அந்தப் புகைப்படங்களை நீக்க வேண்டும் அதற்கு 13 கோடி ரூபாய் செலவாகும் என விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பைகளையே மாணவர்களுக்கு விநியோகியுங்கள், அதை நீக்குவதற்கு ஆகும் செலை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மற்ற வகையில் உபயோகித்துக் கொள்ளலாம் வீண் செலவு வேண்டாம் என கூறியதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. 

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதனை தெரிவித்ததோடு, தாயுள்ளம் கொண்ட முதலமைச்சரை பார்த்து காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் என யாரும் கூறாதீர்கள் என நெகிழ்ச்சிப்பட தெரிவித்தார். ஒரு ஆட்சியை அவர்களது புகைப்படம் சொல்லாது செயல்படும் விதம் தான் சொல்லும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபனம் செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.