"மோடிக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் போட்டியிடட்டும்" - உதயநிதி ஸ்டாலின்.

"மோடிக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் போட்டியிடட்டும்" - உதயநிதி ஸ்டாலின்.

INDIA கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே பாஜக சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளதாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா். 

சென்னையில் நடைபெற்ற 94-வது அகில இந்திய எம்சிசி - முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி  போட்டியில் இந்தியன் ரயில்வேஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் பாிசளிப்பு விழா எழும்பூாில் நடைபெற்றது.

இதில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பாிசுத்தொகையை வழங்கினாா். 

இதனைத்தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்து பேசிய அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்,.. சனாதனம் குறித்து தான் பேசியது சரியானது தான் எனவும், அதனை பாஜகவினர் திரித்துப் பேசுவதாகவும் குற்றம்சாட்டினாா்.

மேலும் INDIA கூட்டணி வலுப்பெறுவதை திசை திருப்பவே சனாதனம் குறித்த பிரச்னையை பாஜக கையில் எடுத்துள்ளதாக தொிவித்த அவா் பொய் செய்திகளை பரப்புவதுதான் பாஜகவின் வேலை என சாடினாா். 

தொடா்ந்து பேசிய உதயநிதி, பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாக கூறுவது நிச்சயமில்லாத ஒன்று என குறிப்பிட்டாா். மோடிக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் போட்டியிடட்டும் என கூறினாா். 

இதையும் படிக்க   |  இந்து மத உணர்வுகளை இழிவு படுத்தியதாக அமைச்சர் உதயநிதி மீது புகார்!