”தமிழுக்கு செய்தவற்றை முதலில் முதலமைச்சர் கூறட்டும்” பா.ஜ.க. மகளிரணி தலைவி பேட்டி!

”தமிழுக்கு செய்தவற்றை முதலில் முதலமைச்சர் கூறட்டும்”  பா.ஜ.க. மகளிரணி தலைவி பேட்டி!

"தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் முதலமைச்சர் இதுவரை என்ன செய்து இருக்கிறார் என்பதை அவர் கூறட்டும்" என பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி உமாரதி பேட்டியளித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி உமாரதி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டிற்கு நமது பாரதப் பிரதமர் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவர் எந்த இடத்தில் பேசினாலும் திருக்குறளை மேற்கோள்காட்டிதான் பேசுவார். புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு தமிழகத்தில் இருந்து தான் செங்கோல் வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு தமிழ்மக்களுக்கும் அது பெருமையை தேடித் தந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு 2 நபர்களுக்கு வாய்ப்பு இருந்தது. ஒன்று பெருந்தலைவர் காமராஜர். இன்னொன்னு மூப்பனார். அவர்களை பதவிக்கு வரா விடாமல் தடுத்தது திமுக என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். வருங்காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பாரதப் பிரதமர் வரவேண்டும் என்பது தன்னுடைய ஆசை என அமித்ஷா குறிப்பிட்டாத கூறியுள்ளார்.

தொடர்ந்து, தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் முதல்வர் இதுவரை என்ன செய்தார் என்பதை அவர் முதலில் கூறட்டும் எனக் கூறிய அவர், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வந்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், தந்தை குடிப்பதை கண்டிப்பதற்காக 10 வயது குழந்தை இறந்து இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், இதற்கெல்லாம் முதல்வர் பதில் கூறட்டும். பின்னர் அவருக்கு அமித்ஷா பதில் கூறுவார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!