தீபாவளி விடுமுறை ; ரூ.467 கோடிக்கு மது விற்பனை!

தமிழ்நாட்டில் தீபாவளி விடுமுறையொட்டி கடந்த இரண்டு நாட்களில் 467 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாக புத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தது போன்று மதுபிரியர்கள் மதுபானங்களை பகிர்ந்து தங்களின் தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.

இதையும் படிக்க : 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் - சென்னை மாநகராட்சி!

இதனால் இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையன்று தமிழ்நாட்டில் 467 கோடி ரூபாய் மதுபானம் விற்பனை செய்யப்படுள்ளது. 11ம் தேதியன்று 221 கோடி ரூபாய்க்கும், 12ம் தேதி 246 கோடி ரூபாய்க்கும் மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 104 கோடி ரூபாய்க்கும, சென்னையில் 101 கோடிக்கும்,  திருச்சி மண்டலத்தில் 95 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்தாண்டை காட்டிலும், சுமார் 4 கோடி ரூபாய்க்கு விற்பனை குறைந்துள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.