கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை...தனியார் மருத்துவமனை சாதனை!

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை...தனியார் மருத்துவமனை சாதனை!

இந்தியாவில் முதல் முறையாக உயிருடன் உள்ள ஒருவரது கல்லீரலை பெற்று, 170- கிலோ எடைக்கொண்ட நோயாளிக்கு பொருத்தி தனியார் மருத்துவனை சாதனை படைத்துள்ளது. 


புதுச்சேரியை சேர்ந்த 50-வயதான தொழில் அதிபர் ஒருவர், சிறு வயது முதலே ஏற்பட்ட உடல் பருமன் காரணமாக கல்லீரல் நோய், இரத்த கொதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதையும் படிக்க : அதிமுக ஆட்சியில் தொடங்கிய பணி... திமுக ஆட்சியில் திறக்கப்பட்டதால் பரபரப்பு...!

இந்நிலையில் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், மருத்துவர்கள் உயிருடன் உள்ள ஒருவரிடம் கல்லீரலை தானமாக பெற்று, நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்.

இதையடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த குளோபல் மருத்துவமனை நிர்வாகம் நோயாளி கையால் கேக் வெற்றி தங்களது சாதனையை கொண்டாடினர்.