தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை  தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 

தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து, வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு என்ற தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டை துவக்கி வைக்கவும், விழா பேருரையாற்றவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக துவக்க விழா, கண்காட்சி மற்றும் கலந்துரையாடல் ஆகியவை அமையவுள்ளன. கண்காட்சியில் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன. 

இக்கண்காட்சி பொது மக்களுக்காக இன்று மாலை 2 மணி முதல் 5 மணி வரை திறந்து இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட உள்ளன.