மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு...

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் ஆய்வு...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பயிர்களும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர் சேதத்தை ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில், அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இன்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து நிவாரண நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, மழையால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.