மதுரை சித்திரை திருவிழா...வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு...!

மதுரை சித்திரை திருவிழா...வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு...!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் மே 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க : " பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்கனும்..?" - நடிகை கஸ்தூரி பேச்சு.

இந்நிலையில், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து, வைகை ஆற்றுப்படுகை வழியாக 750 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து மொத்தம் 26 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.