கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு: பால்வளத்துறை அமைச்சர் நாசர் பகீர் குற்றச்சாட்டு...

ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு: பால்வளத்துறை அமைச்சர் நாசர் பகீர் குற்றச்சாட்டு...

சேலம் ஆவின் பால் பண்ணையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், விலைக்குறைப்புக்கு பிறகும் சென்னையில் பழைய விலையிலேயே பால் விற்பனை செய்த 22 விற்பனை நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் ஆவின் ஊழியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறிப்பாக 234 பேர் முறைகேடாக நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.