எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம்.. ஒரு ஆண்டில் முடிவடையும். எஸ்.பி.பி. சரண் பேட்டி...

எஸ்பிபிக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டபம் மேலும் ஒரு ஆண்டுக்குள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக அவருடைய மகனும் பாடகருமான எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி.க்கு மணிமண்டபம்.. ஒரு ஆண்டில் முடிவடையும். எஸ்.பி.பி. சரண் பேட்டி...

மறைந்த பாடகர் எஸ் பி பி கடந்த ஆண்டு இதே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நுரையீரல் இருதயம் பாதிப்படைந்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது உடலானது திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது,

இன்று அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினம் என்பதால் அவருடைய நினைவிடத்தில் அவர் சிவன் பக்தர் என்பதால் அவருடை நினைவிடத்தில் சிவலிங்கம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது  அவர் நினைவு போற்றும் வகையில் அப்பகுதியில் இசை  அஞ்சலி செலுத்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது,

இந்நிலையில் கொரோனா  காலம் என்பதால் பொதுமக்கள் ஊடகங்களுக்கு உள்ளே அனுமதி அளிக்கப்படவில்லை. அவருடைய நினைவு இடத்திற்கு இன்று காலை முதல் ஐதராபாதிலிருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து  மலர் வளையத்துடன் வந்த ரசிகர்கள் அனுமதி மறுப்பால் ஏமாற்றத்துடன் வெளியே காத்திருந்து சென்றனர்.

எஸ்.பி.பி.  நினைவிடத்திற்கு  ஐதராபாத் பகுதியைச் சேர்ந்த சாந்தி ராஜா என்ற இளைஞர் வித்தியாசமாக எஸ்.பி.பி. அவர்கள் பல்வேறு மொழிகளில்  பாடிய  425  பாடல்கள் அடங்கிய டேக் அணிந்து  அவருடைய நினைவிடத்திற்கு  வருகை தந்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.பி சரண்.

கொரோனா காலம் என்பதால் அப்பா நினைவிடத்திற்கு  காவல்துறையினர் அனுமதி தரவில்லை என்பதால், பொதுமக்கள் ஊடங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அப்பா வீட்டு  சென்ற பணிகளை  தான் தொடர்ந்து செய்து வருவதாகவும்,ஒரு ஆண்டுகள் அப்பா  இல்லாமல் வருத்தமாக இருப்பதாகவும், அவருக்கு மனி மண்டபம் கட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும்,அங்கு அருங்காட்சியகம் திரை அரங்கம்  அமைக்க ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு உதவி கேட்க இருப்பதாகவும் அவர் கூறினார்.