மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,058 கன அடியிலிருந்து 5,166 கன அடியாக குறைவு!!

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியில் இருந்து தற்போது 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 8,058 கன அடியிலிருந்து 5,166 கன அடியாக குறைவு!!

தமிழகம், கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால், காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகமானது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்தது.

இதையடுத்து அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதன்படி மேட்டூர் அணைக்கு 8 ஆயிரத்து 58 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 5 ஆயிரத்து 144 கன அடியாக சரிந்துள்ளது.

அதே சமயம் அணையின் நீர்மட்டம் 117. 82 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக தற்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அணையின் தற்போது 90.03 டி.எம்.சி அளவு நீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீர் வெளியேற்றத்தை விட, நீர்வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர் மட்டம் குறைய தொடங்கியுள்ளது.