அனைத்து பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு....

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து, இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அனைத்து பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்க அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு....

நெல்லையில், அரசு உதவிபெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள சேதமடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

அடையாளம் காணப்படும் பள்ளி கட்டடங்களை இடிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த செயலாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் கொண்டனர்.  

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் உயிரிழந்த சம்பவம், மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். பல பள்ளிகளில் நேரில் சென்று  கழிவறைகளைப் பார்வையிட்டுள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார். மேலும், இடம் இல்லாத பட்சத்தில் வாடகைக்கு இடம் தேர்வு செய்ய வலியுறுத்தி உள்ளதோடு, பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.