10 கோடி ரூபாய் மதிப்பில் நடைமேம்பாலம்...திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

10 கோடி ரூபாய் மதிப்பில் நடைமேம்பாலம்...திறந்து வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்!

சென்னை தாம்பரத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பில் நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பால இணைப்பு பகுதியை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்துள்ளார். 

தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஜிஎஸ்டி சாலையை கடக்க கடந்த 2021 ஆம் ஆண்டில் 9 கோடி ரூபாய் செலவில் நடை பாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இதையும் படிக்க : 'ஆபரேஷன் காவேரி' மீட்பு பணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயார்...முதலமைச்சர் கடிதம்!

ஆனால், இந்த நடைமேடையினை ரயில்வே நிலையத்துடன் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து, 10 கோடி ரூபாய் மதிப்பில் டிக்கெட் கவுண்டர் மற்றும் நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.  

இந்நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், மேம்பாலத்தை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு நடை மேம்பாலத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக எம்பி. டி.ஆர். பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.