எங்கும் ஏறலாம்,எங்கும் இறங்கலாம் என்ற இலவச பயண திட்டம் - சுற்றுலா நட்பு வாகனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்!!

எங்கும் ஏறலாம்,எங்கும் இறங்கலாம் என்ற இலவச பயண திட்டம் - சுற்றுலா நட்பு வாகனத்தை துவக்கி வைத்தார் அமைச்சர் மதிவேந்தன்!!

44 வது செஸ் ஒலிம்பியாட்டை முன்னிட்டு எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் என்ற இலவச பேருந்து திட்டத்தை துவக்கி வைக்கபட்டுள்ளதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

5 இலவச பேருந்துகள்:

இது தொடர்பாக சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த அவர், 5 இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும்  யார் வேண்டுமானாலும் பயணிக்கும் வகையில் இத்திட்டம் துவங்கி வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

25 ஆட்டோக்கள்:

அதுமட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கு நட்பு வாகனம் என்ற வகையில் சுற்றுலா நட்பு வாகனங்கள் 25 ஆட்டோக்கள் துவங்கி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

பேருந்துகளுக்கு பயண கட்டணம் இல்லை எனவும்  ஆட்டோக்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவம் அமைச்சர் தெரிவித்தார்.

சுற்றுலா நட்பு வாகனம்:

முன்னதாக மாமல்லபுரத்தில் செஸ் வீரர்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை எளிதில் சுற்றி பார்க்கும் வகையில் சுற்றுலா துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நட்பு வாகனத்தை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.