"500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை" அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு!

"500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை" அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு!

500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்குதுறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 
கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அலுவலர்களுடன் கூட்டங்களை நடத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல கள்ளச்சாராயத்தால் ஏற்படும் பிரச்சினைகளை களைய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், எதிர்க்கட்சிகள் விளம்பரத்திற்காக பல குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளதாக குற்றம் சாட்டினார். டாஸ்மாக் கடையை மூடுவதற்கான தகவல் தற்போது தன்னிடம் இல்லை என தெரிவித்த அவர், இன்னும் பத்து நாட்களில் ஆய்வு செய்து அது குறித்து தெரிவிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தை இலக்கு வைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், மறைமுகமாக இந்த வருமானமானது வெளியில் செல்கிறது எனவும் குறிப்பாக கள்ளச்சாராயம் உள்ளிட்டவை மூலம் இந்த வருமானம் வெளியே செல்வதால், டாஸ்மாக்கில் இலக்கை நிர்ணயித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மது அருந்துபவர்கள் தவறான வழியில் பணத்தை செலவழிக்க கூடாது என்பதற்காகதான் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிக்க:வங்கியில் கொள்ளை முயற்சி; போலீஸ் விசாரனை!