அமைச்சர் சேகர்பாபு வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது... அண்ணாமலை ....!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது காவல்துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு தகுதி வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு வாய்க்கு வந்ததெல்லாம் பேசக் கூடாது... அண்ணாமலை ....!!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கோவில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியை காணொளியில் காணும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், 

பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் விஷயத்தில் இந்து அறநிலைத்துறை நாடகமாடுகிறது யாரெல்லாம் கடவுளை நம்பி ஆன்மிகத்தை நம்பி கோவிலில் சாமி தரிசனம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நமது நம்பிக்கையில் நிச்சயமாக இடம் இருக்கிறது அதை தடுத்து நிறுத்துவதற்கு யாருக்கும் அருகதை கிடையாது என்றார்.

சிபிஎஸ்இ தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து கேட்டதற்கு இந்தியாவில் இரண்டு பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் ஒன்று காங்கிரஸ்காரர்கள் மற்றொன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் என கூறிய அவர், வேலை இல்லாதவர்கள் சொல்வதை சீரியசாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறினார்.

திமுக உறுப்பினர்கள் யாரெல்லாம் தவறு செய்து இருக்கிறார்களோ அவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நாளை எப்ஐஆர் பதிவு செய்தால் காவல்துறை தலைவரை முதல் ஆளாய் வரவேற்பது பாரதிய ஜனதா கட்சிதான் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்து அறநிலைய துறை அமைச்சர் கட்சி மாரி இன்னொரு கட்சிக்கு வந்து வெள்ளை கலர் சட்டை அணிந்து நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டால் அவரின் பழைய வரலாறு மக்கள் மறந்து விடுவார்களா என்ன? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது காவல்துறை தலைவரை ஆதரித்து பேசுவதற்கு தகுதி வேண்டும் சட்டத்தை மதிப்பவர் ஆக சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவராக இருக்க வேண்டும் ஆன்மீகம் வேஷம் போட்டு கொள்ள கூடாது