விஷுவல் பிரசண்ட்டர் மற்றும் வயர்லெஸ் டேப்லட் தொழில்நுட்பம்...! தொடங்கி வைத்த அமைச்சர்..!

விஷுவல் பிரசண்ட்டர் மற்றும் வயர்லெஸ் டேப்லட் தொழில்நுட்பம்...! தொடங்கி வைத்த அமைச்சர்..!

சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் விஷுவல் பிரசண்ட்டர் மற்றும் வயர்லெஸ் டேப்லட் தொழில்நுட்பத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளை எளிமை படுத்த எல்மோ என்ற தனியார் நிறுவனம் சார்பில் (visual presenter) காட்சிப்படுத்தும் சாதனம் மற்றும் Wireless Tablet (வரைப்பட்டிகை) தொழில்நுட்பத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அதன் முதல் பகுதியாக இத்தொழில்நுட்பம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சேப்பாக்கம் தொகுதியில் 5 பள்ளிகளில் தலா ஒரு வகுப்பறை வீதம் 5 வகுப்பறைக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிகளில் பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கற்றல் முறையை எளிமையாக்கி பொதுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளை சுலபமாக எதிர்கொள்ள வழிவகுக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதேபோல் பகுதி 2 ஆக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் இந்தத் திட்டமானது 13 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 18 பள்ளிகளில், சுமார் 83 வகுப்பறைகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க : மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் 2 - வது கட்ட பேச்சுவார்த்தை...!