புலி தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு வனத்துறை அமைச்சர் ஆறுதல்...

கூடலூர் அடுத்த மசினகுடியில்  ஆட்கொல்லி புலி தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மசினகுடி, சிங்காரா, தெப்பக்காடு உள்ளிட்ட கிராம சுற்றுவட்டாரப் பகுதிகளில் 12 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று சுற்றித் திரிந்து வருகிறது. வயது முதிர்வின் காரணமாக வனவிலங்குகளை வேட்டையாட முடியாத இப்புலி மனிதர்களை அடித்து கொன்று வருகிறது. இதன் காரணமாக புலியை சுட்டு பிடிக்க வனத்துறை உத்தரவிட்டது.

இதனையடுத்து கடந்த 8 நாட்களுக்கும் மேலாக தமிழக கேரள வனத் துறையினர் இணைந்து புலியை சுட்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மசினகுடி பகுதியில் மாதன் () மங்கள பஸ்வன் என்ற 85 வயது ஆட்கொல்லி புலி முதியவரை அடித்து கொன்றது. கும்கி யானைகள் உதவியுடன் அடர் வனப்பகுதியில் ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் நடவடிக்கைகளில் வனத்துறையினர் களமிறங்கியுள்ள நிலையில் அதனை பார்வையிட மசினகுடி பகுதிக்கு வந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், புலி தாக்கி உயிரிழந்த  முதியவர் மங்கள பசுவனின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.