நத்தையாரே... அப்படி என்னத்த கிழிச்சீங்க? Google க்கு கூட தெரியல!! முன்னாள் அமைச்சரை ட்விட்டரில் சம்பவம் செய்த செந்தில் பாலாஜி  

நத்தையாரே... அப்படி என்னத்த கிழிச்சீங்க? Google க்கு கூட தெரியல!! முன்னாள் அமைச்சரை ட்விட்டரில் சம்பவம் செய்த செந்தில் பாலாஜி   

தமிழகத்தில் ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்த பிறகும் கூட பலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே செல்லூர் ராஜு விமர்சித்து பங்கமாக வாங்கிக்கட்டிக்கொண்டார். அவரைத் தொடர்ந்து தற்போது முன்னாள் மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் தன் பங்குக்கு செந்தில் பாலாஜியை விமர்சித்து வாங்கிக் கட்டிக்கொண்டுள்ளார்.

 தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்குக் காரணம், அந்தத் துறை அமைச்சராக உள்ளவருக்கு மின் துறை குறித்து புரிதல் இல்லாததுதான் என்றும் திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மின்வெட்டு வந்துவிடும். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவது போல் பிரிக்க முடியாதது திமுகவும் மின்வெட்டும்தான் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

 இந்த நிலையில் முன்னாள்அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் டிவீட்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், மின்துறை அமைச்சராக திரு. நத்தம் விஸ்வநாதன் இருந்த போது, மக்கள் துவைத்த துணிகளை மின் கம்பியில் காயப்போடும் அளவுக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்தது. இதைத் தீர்க்க விஸ்வநாதன் எதாவது புதிய மின் திட்டம் தொடங்கினாரா என தேடிப்பார்த்தால், Google கூட விடை சொல்ல தவிக்கிறது.

 2006 - 2011 திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட புதிய மின் திட்டங்களால் தான் நத்தம் விஸ்வநாதன் தப்பித்தார். சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்யும் அதிமுக மின் மந்திரிகளின் மின்துறை புரிதல் பற்றி தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என பதிவிட்டுள்ளார்.

 மேலும் விஸ்வநாதனின் கீழ் மின்வெட்டு எப்படி இருந்தது என்பதை என்னை விட, அவர்களது கூட்டணி கட்சித் தலைவர் அய்யா ராமதாஸ் அவர்கள் நன்றாகவே விளக்கியிருக்கிறார். மின்துறை பற்றி புரிதல் இருக்கட்டும், முதலில் நத்தையார் மின்துறை பற்றி அறிதல் வேண்டும் என பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளார்.