முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்தது - விவசாயிகள் மகிழ்ச்சி...!

முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து அதிகரித்தது -  விவசாயிகள் மகிழ்ச்சி...!

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக  நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.   தமிழக - கேரள எல்லையில் குமுளி அருகே முல்லைப்பெரியாறு அணை உள்ளது. இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாகத்  திகழ்கிறது. கடந்த வாரங்களில் முல்லைப் பெரியார்  அணைப்பகுதியில் கடும் வறட்சி காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.  இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சிவகிரி மலைத்தொடர், முல்லையாறு,முல்லைக்கொடி தாண்டிக்கொடி, ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்தது.  அதைத்தொடர்ந்து, தற்போது, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 மேலும், நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 204 கன அடியாக இருந்தது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில்  மழை காரணமாக  நீர்வரத்து, வினாடிக்கு 516 கன அடியாக அதிகரித்து அணையின்  நீர் இருப்பு 1916 மில்லியன் கன அடியாக உள்ளது.  

இதையும் படிக்க   }  வங்காள பறவையை நீர் தூவி வரவேற்ற சென்னை விமான நிலையம்...!

இந்நிலையில், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து  வினாடிக்கு 100 கன நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 116.05 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிக்க   } சட்டப்பிரிவு 110...! காவல்துறைக்கு மீண்டும் அதிகாரம் பெற சட்ட திருத்தம்...!