விமான டிக்கெட் விலை பன்மடங்கு அதிகரிப்பு.!!

விமான டிக்கெட் விலை பன்மடங்கு அதிகரிப்பு.!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள மாநில விமான பயண கட்டணங்கள் பண்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கான ஒரு வழி விமான பயண கட்டணம் 9 ஆயிரத்து 500ஆகவும், மதுரைக்கான விமான டிக்கெட் விலை 10 ஆயிரமாகவும், தூத்துக்குடிக்கு 11 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுகிறது.

இதனால் மும்பை, டெல்லிக்கான விமான பயணக் கட்டணங்களை விட மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கான பயண கட்டணம் அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.