இரு மடங்காக உயர்த்தி நகராட்சி வரி வசூலிப்பு ...! பொது மக்கள் அவதி..!

இரு மடங்காக உயர்த்தி  நகராட்சி வரி வசூலிப்பு  ...! பொது மக்கள் அவதி..!

திருச்செந்தூர் நகராட்சி வரிவிதிப்பு குடிதண்ணீர் பிரச்சனை குறித்த அவசர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தெவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, வணிகவரி, ஆகியவை ஏ, பி, சி என மூன்று மண்டலமாக வரி உயர்த்தப்பட்டு அமலில் இருந்து வந்தது. இந்த மூன்று மண்டலங்களிலும் இரு மடங்காக வரி உயர்வு விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டு வந்தனர்.இதற்கு பொதுமக்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இதுகுறித்து அவசரக் கூட்டம் இன்று நகராட்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு 16 வது வார்டு திமுக கவுன்சிலரும் வரிவிதிப்பு குழு உறுப்பினருமான ஆனந்த ராமச்சந்திரன் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் குடிதண்ணீர் பிரச்சினை வரி உயர்வு மற்றும் வார்டுகளில் உள்ள முக்கிய பிரச்சனைகளை குறித்து பேசியனர். அப்போது திமுக கவுன்சிலர்கள் பொதுமக்கள் பிரச்சனையை நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் பாஜக மற்ற கட்சிகள் பல்வேறு அமைப்புகள் பொதுமக்கள் பிரச்சினை குறித்து மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக புலம்பினர்

 மேலும் அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க :மாணவிகள் புகார் கூறிய ஆசிரியர்களுக்கு கல்லூரிக்குள் அனுமதியில்லை...மாநில மகளிர் ஆணைய தலைவி அறிவிப்பு!