ஸ்டெர்லைட்டை விட என்எல்சியால் பாதிப்பு அதிகம் - அன்புமணி ராமதாஸ்!

ஸ்டெர்லைட்டை விட என்எல்சியால் பாதிப்பு அதிகம் - அன்புமணி ராமதாஸ்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சி-யால் பாதிப்புகள் அதிகம் என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு ஒருபக்கம் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் போடுகிறார்கள். மறுபக்கம் விவசாயிகளை அச்சுறுத்தி காவல்துறையை வைத்து நிலங்களை பிடுங்கி அதை என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஒப்படைத்துக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

இதையும் படிக்க : ’ஜெயிலர்’: முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ...இணையத்தில் வைரல்!

விவசாயத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்த அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி.யால் 5 மாவட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், அதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் என்.எல்.சி-யை எதிர்த்து பாமக தொடர்ந்து போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை விட கடலூர் என்.எல்.சி-யால் தான் பாதிப்புகள் அதிகம் என குற்றம் சாட்டிய அன்புமணி ராமதாஸ், என்.எல்.சி. நிர்வாகத்தில் ஒரு நபர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கிடையாது எனவும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கிறது எனவும் வேதனை தெரிவித்தார்.