”அர்ஜுன் படத்தில் வருவதைப் போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள்”:அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்- சீமான் 

திமுகவை எதிர்த்து நாங்கள் போராடுவோம் எங்களை எதிர்த்து திமுக போராடும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

”அர்ஜுன் படத்தில் வருவதைப் போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள்”:அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்- சீமான் 

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சீமான் தலைமையில் போராட்டம் என்றதும், அவர் வருவதற்கு முன்பு அங்கு திமுகவினர் குவிந்துவிட்டனர்.

இதனையடுத்து ஆர்பாட்டத்தில் கடைசியாக பேசிய சீமான் சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது குறித்து அரசு குழு அமைத்துள்ளது. புழு கூட நகரும். ஆனால் அரசு அமைக்கும் குழுக்கள் எதுவும் செய்யாது. மொழி வழியே தான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சாதி வாரியாக, மதம் வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை என்றார். ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்ட எழுவர் மற்றும் இஸ்லாமியர்களை விடுவிக்காமல் இருப்பது சரியல்ல. இதை புரிந்து கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்களுக்கு வேறு வேலை இல்லை. போராடிக் கொண்டேதான் இருப்போம்.

7 தமிழர்களை விடுவிப்பதில் என்ன பிரச்னை? ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்? அர்ஜுன் படத்தில் வருவதைப் போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள். அப்படி ஆக்கினால், ஒரே நாளில் எல்லாவற்றையும் செய்து விட்டு விலகிக் கொள்கிறேன்” என்று பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். அதில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லை என கூறினார்.திமுகவை எதிர்த்து நாங்கள் போராடுவோம் எங்களை எதிர்த்து திமுக போராடும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் என பேசினார்.