கொட்டும் மழையிலும் திரண்ட மீன்பிரியர்கள் ; எதிர்பார்த்த அளவிற்கு மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி!

கொட்டும் மழையிலும் திரண்ட மீன்பிரியர்கள் ; எதிர்பார்த்த அளவிற்கு மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி!

மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் மாதம் 15 ஆம் தேதி வரை 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமுலில் இருந்தது. மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தற்போது 60 நாட்களாக மீன்பிடித்தடைக் காலம் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தடைக்காலம் கடந்த 15ஆம் தேதியுடன் நிறைவு பெற்று அனைத்து வகையான படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. 

இதையும் படிக்க : நீட் தேர்வு முடிவுகள் சமூக நீதிக்கு எதிரானது...ரத்து செய்வதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் - ஓபிஎஸ்!

இந்நிலையில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் இன்று அதிகாலை கரைக்கு திரும்பினர். மழை பெய்த நிலையிலும், மீன்களை வாங்க வியாபாரிகளும், மீன் பிரியர்களும் நாகை துறைமுகத்தில் திரண்டனர். 60 நாட்களாக உயர்ந்து காணப்பட்ட மீன்களின் விலை சிறிது குறைந்து காணப்பட்டதால், அதிகளவில் மீன்கள் வாங்க முடிந்ததாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.