காரைக்காலில் அபுல் அமீன் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை!!

காரைக்கால் முஸ்லீம் ஜமாத்தார்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அபுல் அமீன்  வீட்டில் தேசிய புலனாய்வுஅதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

காரைக்காலில் அபுல் அமீன் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை!!

காரைக்கால் ராமையா நகரில் அமைந்துள்ள அபுல் அமீன் என்பவரின்  வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கேரளாவிலிருந்து வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.  பல்வேறு குற்ற வழக்குகளில்  கைது செய்யப்பட்டவர்களுடன் அமீனுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி அபுல் அமீன் வீடு மற்றும் சுற்று வட்டார பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதேபோல் தஞ்சை கீழவாசல் மஹர்னன் புசவடி, தைக்கால் தெருவில் வசிக்கும் டூவீலர் மெக்கானிக் அப்துல் காதர் மற்றும் முகமது யாசின், காவேரி நகர் பகுதியை சேர்ந்த அகமது ஆகியோர்களது வீட்டில் தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள்  சோதனை நடத்தனர். இந்துக்களை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருவது பற்றி  இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.