நெல்லை - திருச்செந்தூர் வழியே சிறப்பு ரயில்.. ஏன்?.. முழு விவரம்!

வைகாசி  விசாகத் திருவிழாவை முன்னிட்டு நெல்லை - திருச்செந்தூர் வழியே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

நெல்லை - திருச்செந்தூர் வழியே சிறப்பு ரயில்.. ஏன்?.. முழு விவரம்!

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி மதுரை கோட்ட ரயில்வே சார்பில் நெல்லை - திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி இந்த சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து காலையில் 11.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இரவு 8. 30 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரயில்கள் பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகநேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.