நெல்லை.. சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா.. தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி

சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை.. சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா.. தீவிர சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதி

2 ஆண்டுகளுக்கு பின் ஆடி அமாவாசை திருவிழா:

நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்தி பெற்ற காரையார் செரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், நாளை ஆடி அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது.

தீவிர சோதனை:

இந்த அமாவாசை திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பாதுகாப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாபநாசம் சோதனை சாவடி மற்றும் காணிகுடியிருப்பில் நடைபெறும் சோதனையின்போது, பக்தர்கள் கொண்டு வரும் பாலித்தீன் பை, புகையிலை பொருட்கள், சோப்பு, ஷாம்பு, மது பாட்டில் உள்ளிட்டவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தபிறகு அவர்களை கோவிலுக்கு அனுமதிக்கின்றனர்.

தனியார் வாகனங்களில் பக்தர்கள் கோயிலுக்கு வர தடை:

விழாவையொட்டி இன்றுமுதல் 30 -ந் தேதி வரை தனியார் வாகனங்களில் பக்தர்கள் கோயிலுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அகஸ்தியர்பட்டியில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகள் மூலம் மட்டுமே கோயிலுக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.