சென்னை விமான நிலையத்தில் புதிய சோதனை ஓட்டம்...!!

சென்னை விமான நிலையத்தில் புதிய சோதனை ஓட்டம்...!!

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையத்தில் முதல் விமானமாக டாக்கா விமானம் இயக்கப்பட்டுள்ளது.

புதிய முனையம்:

சென்னை பன்னாட்டு முனையத்தில்  ஒருங்கிணைந்த புதிய விமான முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த புதிய முணையத்தை கடந்த 8ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  இந்த புதிய முனையம் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத நவீன முனையமாக அண்ணா பன்னாட்டு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய, தமிழ்நாட்டு கலாச்சாரம், புரதான நினைவுச் சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோயில்கள் போன்ற  ஓவியங்கள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

அதிக பயணிகள்:

தற்போதைய சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் கையாளுவதிலிருந்து 30 மில்லியன் பயணிகளை கையாளும் வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.  மேலும் இந்த முனையம் அதிநவீன புதிய தொழில்நுட்பத்துடன், பயணிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நவீன கருவிகள்:

இந்த புதிய முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக 100 கவுண்டர்கள், குடியுரிமை சோதனைக்காக 108 கவுண்டர்கள், பயணிகள் உடமைகள் வரும் 6 கண்வயர் பெல்ட்கள், 17  அதிநவீன லிப்ட்டுகள், 17 எஸ்க்லெட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள்,  பயணிகள் உடைமைகளை பரிசோதனை செய்ய 3 அதி நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விமான நிலைய ஓடுபாதை, விமானம் நிறுத்தும் இடம், டாக்ஸி வே போன்றவைகளும் புதுப்பிக்கப்பட்டு, நவீனப்படுத்தப்பட்டு உள்ளன.  விமானங்கள் புறப்படுவதற்கு முன் ஓடுபாதையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

முதல் சோதனை ஓட்டம்:

இந்த புதிய ஒருங்கிணைந்த அண்ணா பன்னாட்டு முனையத்தில் முதல் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.  பகல் 12:55  மணிக்கு வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வரும் பங்களா ஏர்லைன்ஸ் விமானம் முதல் விமானமாக புதிய முனையத்தில் தரை இறங்கியது.  இதில் வந்த 192 பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் மலர் தந்து வரவேற்றனர்.  அதே விமானம் பிற்பகல் 1:55 மணிக்கு புதிய முனையத்தில் இருந்து 189 பயணிகளுடன் டாக்காவுக்கு புறப்பட்டு சென்றது. 

வெற்றி பெற்றால்:

மேலும் சில விமானங்களும் சோதனை அடிப்படையில் இந்த புதிய முனையத்தில் இயக்கப்படும் எனவும் இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெறும் நிலையில் வருகின்ற மே மாதத்தில் இருந்து இந்த புதிய முனையத்தில் பெரிய ரக மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க:  அஜீத் ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் வேண்டுகோள்...!!