ஆவின் -ல் புதிதாக,... செறிவூட்டப்பட்ட பசும் பால் அறிமுகம்...!

ஆவின் -ல் புதிதாக,... செறிவூட்டப்பட்ட பசும் பால் அறிமுகம்...!

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக இன்று முதல் அனைத்து ஆவின் பாலகங்களிலும் செறிவூட்டப்பட்ட பால் விற்பனை. 

இன்று முதல் அனைத்து ஆவின்‌ பாலகங்களிலும் செறிவூட்டப்பட்ட பசும்பாலை ஆவின் நிா்வாகம் அறிமுகம் செய்துள்ளது.நிர்ணயிக்கப்பட்ட விலையாக 22ரூபாயை அமல்படுத்தியுள்ளது... 

Aavin milk turns dearer in many areas - The Hindu

இது குறித்து, ஆவின் நிா்வாகம் சாா்பில் வெளிடப்பட்டிருந்த அறிவிப்பில்,

ஆவின் நிறுவனம் தினமும் சுமாா் 30 லட்சம் லிட்டா் பாலை விற்பனை செய்து வருகிறது. உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற்றுத்தருவதில் வைட்டமின் ‘டி’ பங்களிப்பதால், பாலில் வைட்டமின் ‘டி’ செறிவூட்டம் செய்வது மிகுந்த பயனளிப்பதாக இருக்கும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் பரிந்துரைதிருந்து.

இதையும் படிக்க      }  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி துணை மேயர் ஆனதால்... அதிருப்தி அடைந்ததா திமுக..?

அதனடிப்படையில் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘டி’ செறிவூட்டப்பட்ட பால் அறிமுகப்படுத்தப்படும் என பேரவை கூட்டத்தொடரில் பால் மற்றும் பால் பண்ணை வளா்ச்சித் துறை மானியத்தின்போது அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையிலும், வாடிக்கையாளா்களின் நலன் கருதியும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையத்தில், வைட்டமின் ‘எ’ மற்றும் வைட்டமின் ‘டி’ செறிவூட்டம் செய்யப்பட்ட பசும் பால் (ஊதா நிற பால் பாக்கெட்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க      } அண்ணாமலை மீது முதலமைச்சர் சார்பில் வழக்கு...!!