சந்திரயான் மினியேச்சர் மாதிரியை மாணவர்களுக்கு விளக்கினார் நிர்மலா சீதாராமன்!

கோவை மாவட்டம் பீளமேடு அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டார்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், தூய்மை பிரச்சார திட்டம், கடனுதவி வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பள்ளி மாணவர்களுடன் விஞ்ஞானம் குறித்து கலந்துரையாடினார். 

இதையும் படிக்க : ”தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது” - முதலமைச்சர்

தொடர்ந்து, சந்திரயான் மினியேச்சர் மாதிரியை மாணவர்களுக்கு காண்பித்து அதனை பற்றி விளக்கியதோடு, மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக அப்பகுதியில் தூய்மை பாரத திட்டத்தை முன்னிட்டு வங்கி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டார்.