2 வருடமாக குடிநீர் இல்லை .....! கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர் - பட்டை நாமம் போட்டு மக்கள் ஆர்பாட்டம்...

2 வருடமாக குடிநீர்  இல்லை .....! கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவர் -  பட்டை நாமம் போட்டு  மக்கள்  ஆர்பாட்டம்...

வந்தவாசி அருகே இரண்டு வருடமாக குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதியுறுகின்றனர். மேலும், கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்து கிராம பொதுமக்கள் கூடி பட்டை நாமம் போட்டுக் கொண்டு காலி குடங்களுடன் நூதன முறையில் போராட்டதில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த அருந்தோடு மதுரா புதுஜெயமங்களம் கிராமத்தில் இரண்டு வருடமாக குடிநீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை கூறியும்,  ஊராட்சி மன்ற தலைவர் கண்டு கொள்ளாமல் செயல்படுகிறார் எனவும், இதனால் மக்கள் வஞ்சிக்கப்படுவதால் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று குடிநீர் எடுத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. 

இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  இங்குள்ள மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு மேல்நிலை தேக்கத்  தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக குடிநீர்  சரியான முறையில் விநியோகம் செய்யப்படாததால். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் விவசாய நிலத்தின் வழியாக சென்று விவசாய கிணற்றிலிருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி கார்மேகம் என்பவரிடம் பலமுறை கிராம பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அவர் இதற்காக எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சிபுரத்தில் வசித்து வருவதால் கிராமத்திற்கு வருவதில்லை என கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க வேண்டும் எனவும் 20 வருடங்களாக குண்டும் குழியுமாக  இருக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு கையில் காலி குடங்களுடன் புதுஜெயமங்களம் கிராமத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க   }  புதிய மின்மாற்றியை திறந்து வைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்... !

மேலும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்தும் கிராம பொதுமக்கள் பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க   } தடுப்பணை கட்டும் கேரள அரசு...! தூங்கிக் கொண்டிருக்கும் விடியல் அரசு...!! த.பெ.தி.க கண்டனம்...!!!