இந்தியாவில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை... கனிமொழி எம்பி காட்டம்...

ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைபாடு எடுக்கக் கூடியவர்கள் பாஜகவினர் அதனால் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என கனிமொழி எம்பி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை... கனிமொழி எம்பி காட்டம்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கிருஷ்ணாநகர் முதல் எல்லிஸ்நகர் வரை கற்சாலை மேம்பாடு செய்தல் பணிகளை துவக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதில் கனிமொழி எம்.பி மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  எம்.பி. கனிமொழி, பத்திரிக்கையாளர்களின் டெலிபோன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.
 
அரசு நினைத்தால் யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை கொடுக்கக் கூடிய ஒரு மிகப்பெரிய விவகாரம்  என தெரிவித்தார்.
 
மேலும் யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்றும்  சமூக செயல்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கும் போது, அதை பற்றி அரசாங்கம் ஏன் விவாதிக்க தயங்குகிறது என கேள்வியெழுப்பினார்.