ஜோ பைடனுடன் கை குலுக்க தெரிந்த CM க்கு, பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா?

ஜோ பைடனுடன் கை குலுக்க தெரிந்த CM க்கு, பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை எத்தனை குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு நாளையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தாங்கள் பொறுப்பேற்றது முதல் ஆயிரம் குடமுழக்கு விழாக்கள் நடைபெற்றதாக கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரை எத்தனை குடமுழக்கு விழாக்களில் கலந்து கொண்டுள்ளார் என கேள்வி எழுப்பினார். இதேபோல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் கை குலுக்க தெரிந்த முதலமைச்சருக்கு, பாரதியாருக்கு மரியாதை செலுத்த நேரமில்லையா என்றும் வினவினார். 

இதையும் படிக்க : பிரபல ரவுடி சத்யாவிற்கு நேர்ந்த விபரீதம்...பழிக்கு பழி வாங்கிய மர்ம கும்பல்!

இந்துக்களுக்கு எதிரான ஆட்சி அல்ல எனக்கூறிக் கொள்ளும் திமுகவினர், சாதிய பாகுபாடு என்றால் சனாதனம் என்ற பெயரில் போராடுவது போல் நாடகம் ஆடுவதாக விமர்சித்தார். ஜி 20 மாநாட்டில் நமது கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் நடராஜர் சிலை, ஒவியங்கள் இடம் பெற்றதாக பெருமிதம் தெரிவித்த அவர், ஜி 20 மாநாட்டை உலகத் தலைவர்களே போற்றும் நிலையில் நமது உள்ளுர் தலைவர்கள் அதனை விமர்சித்து வருவதாக புகார் தெரிவித்தார்.

சாதிய பாகுபாடு, பெண்ணடிமை தனத்திற்கு எதிராக கருணாநிதி மட்டுமே போராடியதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற அவர், வேங்கைவயல் போன்ற பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல் திமுக புறக்கணிப்பதாக கூறினார். அதே நேரத்தில், பள்ளி வாசல், தேவாலயங்களின் உள்ள வழிமுறைகள் போன்று கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 

இந்தியா என்ற பெயரை பாரத் என மத்திய அரசு மாற்றுவது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன், பாரத நாடு என ஒரே நேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றார்.