பாதாள சாக்கடை பணியின் போது மண்ணில் புதைந்து வடமாநில இளைஞர் பலி!!!!

பாதாள சாக்கடை  பணியின் போது மண்ணில் புதைந்து  வடமாநில இளைஞர் பலி!!!!

திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.இதன் ஒரு பகுதியாக இன்று திண்டிவனம் ரொட்டி கார தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு நான்கு வட மாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க | அளவை மீறி அள்ளப்படும் மணல்...நடவடிக்கை எடுக்கப்படுமா?!

அதில் மூன்று பேர் பள்ளத்தின் மேல் இருந்து கொண்டு ஜல்லியை பாண்டில் அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தனர். பள்ளத்தில் கீழே இருந்த மற்றொரு வட மாநில இளைஞரான
 சிராஜ் பீஞ்ச் என்பவர் ஜல்லியை வாங்கி கீழே கொட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மண் சரிந்ததில் முற்றிலுமாக வடமாநில இளைஞர் மண்ணில்  புதைந்தார்.

மேலும் படிக்க | ஊழல் குறித்த ஆடியோ விவகாரத்தை மறைப்பதற்காகவே இலாக்கா மாற்றம் - ஆர். பி .உதயகுமார் விமர்சனம்!

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை ஜேசிபி எந்திரம் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு பின்பு ஒரு வழியாக அவரை மண் புதையலில் இருந்து மீட்டு வெளியே எடுத்தனர். பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாதாள சாக்கடை திட்டத்தின் பொழுது வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.