ஒரு ரூபாய் கூட கைபற்றபடவில்லை.. வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார் - எஸ்.பி.வேலுமணி!!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு ரூபாய் கூட கைபற்றபடவில்லை.. வழக்கை சட்ட ரீதியாக சந்திக்க தயார் - எஸ்.பி.வேலுமணி!!

கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ். பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார்.  

இதற்கிடையில், எஸ் பி வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்தை விட கூடுதலாக 58 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில்,  எஸ். பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தினர்.

சென்னை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்றது. எஸ். பி.வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் பணம், 11  கிலோ கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், எஸ். பி. வேலுமணி கிரிப்டோகரன்சியில் 34 லட்ச ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குறிப் பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ் . பி. வேலுமணி தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இந்த சோதனை முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெற்றுள்ளதாகவும், வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்துடன் இதுபோன்று செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய எஸ். பி. வேலுமணி, இந்த வருமான வரித்துறை சோதனை குறித்து சட்ட ரீதியாக சந்திக்க தயார் எனவும் கூறினார்.

இதற்கிடையே முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி மீது பதியப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை சோதனை குறித்து, எஸ். பி.வேலுமணி வீட்டின் முன்பு அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப் பினரும், வழக்கறிஞருமான  இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர், எஸ். பி.வேலுமணி வீட்டில் எந்த ஆவணங்களோ, பணமோ அல்லது நகைகளோ ஏதும் கைபற்றபடவில்லை என்றும், எஸ். பி.வேலுமணிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இந்த சோதனை நடத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.