நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு .......விவசாயிகள் மனுக்களை மாலையாக அணிந்து வந்து முற்றுகை ...!

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு .......விவசாயிகள் மனுக்களை மாலையாக அணிந்து வந்து முற்றுகை ...!

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அத்திட்டத்தை கைவிட கோரியும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புகாரை மாலையாக அணிந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்காவிற்கு உட்பட்ட வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நாமக்கல்  ஆட்சியர் அலுவலக வளாகம் வந்தனர். அவர்கள் கோரிக்கை குறித்து இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் தங்களது மனுக்களை மாலையாக அணிந்து வந்து முற்றுகையிட்டு கோரிக்கை மனுக்களை தனித்தனியாக அளித்தனர். 

அதில் தங்கள் பகுதியில் தமிழ்நாடு அரசின் தொழில் துறை மூலம் சிப்காட் அமைய இருக்கிறது. இதற்கான நிலம் கையகப்படுத்துவதற்காக வளையப்பட்டி, பரளி,அரூர், புதுப்பட்டி, லத்துவாடி, உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என கூறினர்..

 மேலும், நாமக்கல் மாவட்டத்திலேயே இந்த பகுதிகளில் தான் அதிகளவில் வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி, மக்காச் சோளம் உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டால் ஏராளமான விவசாய நிலங்களும்  விவசாயமும் பாதிக்கப்படும் என தெரிவித்தனர். 

அதோடு, பொது மக்களின் கருத்துக்களை கேட்காமல் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர் எனவும், மாவட்ட நிர்வாகம் இந்த விசயத்தில் தலையிட்டு சிப்காட் அமைப்பதை கைவிட வேண்டும் என கோரியும்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 இதையும் படிக்க    }தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வலியுறுத்தி........ 500க்கும் மேற்பட்டோர் மனு...!